எனது செய்தி

அன்புக்குரிய நண்பர்களே,

இலங்கை முன்னொருபோதும் இருந்திராத பொருளாதார சவால்களை இன்றளவில் எதிர்கொண்டுள்ளது. நாங்கள் எமது தேசத்தின் வரலாற்றில் தீர்மானகரமான ஒரு தருணத்திலேயே இருக்கிறோம். எஞ்சிய பாதை எளிதானதல்ல, எனினும் கூட்டாக எமது அன்புக்குரிய தாய்நாட்டுக்கான புதிய ஆரம்பத்தை எடுப்பதற்காக நான் உங்களை அழைக்கிறேன். தேசிய மறுமலர்ச்சிக்கான கூட்டு முயற்சிக்கு, இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக மற்றும் புத்துயிரளிப்பதற்காக ஒரு நிலைமாற்றப் பயணத்திற்காக என்னோடு ஒன்றுசேருமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எமது நோக்கு தெளிவானது: இடையறாததன்மையுடன், புத்துருவாக்கம் மற்றும் நிலைதளராத அர்ப்பணிப்புடன் தேசிய பொருளாதாரத்தை அணுக தேசிய மக்கள் சக்தி தயார். நாங்கள் கஒன்றுசேரந்து பன்முக வாய்ப்புகளை எற்படுத்தி, ஒவ்வொரு பிரசையும் முன்னேறக்கூடிய மற்றும் எமது தேசத்தின் அபிலாஷைகளை முழுமையாகவே ஈடேற்றிக்கொள்ளக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம். இது வெறுமனே ஒரு அழைப்பு மாத்திரமல்ல: அது எதிர்பார்ப்பு , ஒற்றுமை மற்றும் பொது நோக்கமொன்றுக்கான அழைப்பாகும். திடசங்கற்பத்துடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் இந்த சவாலை எதிர்கொள்வோம். ஒன்றுசேர்ந்து இலங்கைக்கான ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள இயலுமென்பதோடு எமது தேசத்தின் மிகச்சிறந்த காலம் இன்னமும் எம்மெதிரில் நிலவுகின்றதென்பதை உறுதியாகக் கூறுகிறேன். இந்த முக்கியமான நடவடிக்கைக்காக என்னோடு இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுசேர்ந்து எம்மால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்.

Don’t miss our events

Ruwanwella

Public Rally of NPP

10.00 AM
17/09/2024
Mawathagama

Public Rally of NPP

03.00 PM
17/09/2024
Dodamgaslanda

Public Rally of NPP

04.00 PM
17/09/2024

இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான எனது தொலைநோக்கு

துணிச்சலானதும் விரிவான கொள்கை அணுகுமுறையுடனும் இலங்கைக்கு புத்துயிரளித்து புதிய மறுமலர்ச்சி யுகத்திற்காக நாட்டைக் கொண்டு செல்வதற்காக நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். எனது குறுங்கால வேலைத்திட்டத்தில் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த, ஊழலை வேறோடு பிடுங்கியெறிய, உணவுப் பாதுகாப்பினை ஏற்படுத்த மற்றும் பலம்பொருந்திய சமூகப் பாதுகாப்பினை வழங்குவதங்காக அர்ப்பணிப்புச் செய்வேன். எனது நடுத்தரகால நோக்காக அமைவது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்காக கல்வி, போக்குவரத்து, சுகாதார சேவையில் கணிசமான முதலீடுகளின்பால் கவனஞ் செலுத்துவதாகும். நீண்டகாலரீதியாக ஒவ்வொரு பிரஜைக்கும் நியாயமான நன்மைகள் கிடைக்கின்ற நிலைபெறுதகு பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பி, புரட்சிகரமான நிதிசார் மற்றும் தொழில்நுட்ப புத்துருவாக்கங்கள் ஊடாக பொருளாதார விரிவாக்கத்தை ஏற்படுத்துவதற்காக நான் நடவடிக்கை எடுப்பேன். எமது தேசத்தின் சக்தியையும் சௌபாக்கியத்தையும் நிலைநிறுத்துவதற்கான இந்த மாற்றம்நோக்கிய பயணத்திற்காக என்னுடன் இணைந்துகொள்ளுங்கள்.

Our Previous Events

Jaffna Public Meeting

September 05,2024

Jaffna Public Meeting

Joined the Jaffna Public Meeting today (05). Your presence and support for the 2024 presidential election, which will steer our country towards a new renaissance and a vision of a "Thriving Nation, A beautiful Life," are truly commendable!”.

Kilinochchi Public Meeting

September 05,2024

Kilinochchi Public Meeting

JJoined the Kilinochchi Public Meeting today (05). Your presence and support for the 2024 presidential election, which will steer our country towards a new renaissance and a vision of a "Thriving Nation, A beautiful Life," are truly commendable!”.

Vavuniya Rally

September 05,2024

Vavuniya Rally

Joined the Vavuniya Rally today (05), part of our victory rally series. Your presence and support for the 2024 presidential election, which will steer our country towards a new renaissance and a vision of a "Thriving Nation, A beautiful Life," are truly commendable!”.

Upholding Principles for a Fairer Society

Become an AKD Volunteer

akd